| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| ரெய்னா பேட்டிங் பற்றி டெண்டுல்கர் புகழாரம் |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:34.37 மு.ப GMT ] |
முதல் டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பாக விளையடி சதம் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் அபாரமாக இருந்ததாக சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்."அவரிடம் பன்முகத் திறமை உள்ளது. துடுப்பாட்டத்தில் திடமாக உள்ளார். அருமையான ஷாட்களை விளையாடினார். பந்துகளை ஆடாமல் விடுவதிலும் சிறப்பாகத் திகழ்ந்தார். அவரது ஆட்டம் அவர் முதல் டெஸ்ட்டை ஆடுகிறார் என்பது போல் இல்லை. 98 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியது அவருக்கு உதவிகரமாக இருந்துள்ளது.
தனது முதல் போட்டியில் நெருக்கடி தருணத்தில் களமிறங்கி, மிகப்பெரிய கூட்டணி ரன் சேர்ப்பில் ஈடுபட்டு சதம் எடுப்பதற்கு மேல் நாம் என்ன கேட்க முடியும். நான் அவரை அவர் பாணியில் விளையாட அனுமதித்தேன். எப்போதெல்லாம் சிறிய மாற்றம் தேவையோ அப்போது மட்டும் அவரிடம் சென்று அறிவுரை கூறினேன். அவருக்கு மிகப்பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை உள்ளது அதனை எச்சரிக்கையாகவும் தேர்வு செய்கிறார்." என்று புகழாரம் சூட்டினார் டெண்டுல்கர்.
அதேபோல் தன்னுடைய தயாரிப்பு பற்றி சச்சின் கூறுகையில்,
"நேற்றைக்கு முந்தைய நாள் நான் ஓய்வறை வந்தவுடன் ஐஸ் குளியல் குளித்தேன். அதன் பிறகு சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டேன். வெகுமுன்னதாகவே இரவு உணவை முடித்துக் கொண்டு 8.30 மணிக்கு தூங்கச் சென்றேன். காலையில் எழுந்தவுடன் இதனால் மிகவும் புத்துணர்வுடன் இருந்தேன். எனது மனம் நல்ல உற்சாகத்துடன் இருந்தது.
4 நாட்களாக மைதானத்திலெயே விளையாட்டில் ஈடுபட்டிருந்தேன், இதனால் விரைவில் தூங்கச் சென்று காலையில் புத்துணர்வுடன் எழுந்திருக்கவேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தயார் செய்து கொள்வது என்பது இதுதான்." என்று கூறினார் சச்சின் டெண்டுல்கர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|