உதைப்பந்தாட்ட செய்தி
வட கொரிய உதைபந்தாட்ட அணிக்கு விழுந்தது அடி
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:18.56 மு.ப GMT ]
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் இம் முறை பங்குபற்றிய வட கொரிய உதை பந்தாட்ட அணி மற்றும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் வட கொரிய அரசினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதாக செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியமையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

உதை பந்தாட்ட அணி மற்றும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் இம் மாத ஆரம்பத்தில் விஷேட கூட்டமொன்றிற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கு இவ்வாறு கடிந்துரைக்கப்பட்டதாகவும் பிரீஏசியா வானொலிச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

வட கொரிய அணி தனது முதல் சுற்றிலேயே பிரேஸில், போர்த்துக்கல் மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகளுடன் மோதி தோல்வியடைந்தது.

மேற்படி அணிகள் ' ஜி ' குழுவில் இடம்பெற்றிருந்தமையும் இக் குழு இம்முறை மரணக் குழு என்று அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

44 ஆண்டுக்களுக்கு பிறகு வட கொரியா இம்முறை உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருந்தது.

எனினும் இக் கூட்டம் பற்றியோ அரசின் இந் நடவடிக்கை பற்றியோ வட கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ]
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி‌த் தலைவ‌ர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்]
டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] []
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்]
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]