துடுப்பாட்ட செய்தி
பெங்களுரில் சுழற்பந்து பயிற்சி நிலையம் அமைக்க கும்ளே-முரளிதரன் திட்டம்
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 11:10.34 மு.ப GMT ]
சுழல் பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரன் மற்றும் இந்தியாவின் அனில் கும்ளே, இணைந்து, பெங்களுரில் சுழற்பந்துவீச்சுக்கான பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது கும்ளேவுடன் சேர்ந்து பெங்களுரில் சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து கும்ளே கூறுகையில், பெங்களுரில் சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சி நிலையம் ஆரம்பிப்பது குறித்து, ஏற்கனவே முரளிதரனுடன் கலந்துரையாடி உள்ளேன். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் இதுகுறித்து இன்னும் பேசவில்லை.

சமீபத்தில்தான் இவர் ஓய்வு பெற்றதால், சில பாராட்டுவிழாவில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும். எனவே விரைவில் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், கும்ளேவுடன் இணைந்து பயிற்சி நிலையம் ஆரம்பிப்பதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். இதுகுறித்து உறுதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ]
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி‌த் தலைவ‌ர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்]
டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] []
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்]
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]