| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| சச்சின் 48 வது டெஸ்ட் சதம் : இந்தியா 382/4 |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 03:47.24 பி.ப GMT ] |
கொழும்பில் நடைபெற்றுவரும் இலங்கை இந்திய அணிகளுக்கிடையான கிரிக்கெட் 2வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்துள்ளது.இதில் சச்சின் டெண்டுல்கர் தனது 48-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். 108 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இவருடன் சுரேஷ் ரெய்னா 66 ரன்களுடன் எடுத்து ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர்.
இந்திய அணி 241 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது ஜோடி சேர்ந்த சச்சின், ரெய்னா இணைந்து இது வரை 37 ஓவர்களுக்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
மிக நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கையில் சச்சின் டெண்டுல்கர் சதமடித்துள்ளார். (11 வருடங்கள்)
ஃபாலோ ஆனைக் கடக்க இந்திய அணிக்கு இன்னும் 61 ரன்களே உள்ளன. சச்சினும், ரெய்னாவும் அந்த ரன்களை தாண்டுவார்களா? அவர்கள் தொடர்ந்தால் இந்தியா எடுக்கும் ரன் எண்ணிக்கை இலங்கை அணியின் ஸ்கோருக்கு நெருங்குவதாக அமையுமென எதிர்பார்க்கலாம்.
இலங்கை அணி 642 ரன்கள் எடுத்து டிக்ளே செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது 3ம் நாள் ஆட்டம் முற்றுப்பெற்றுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|