துடுப்பாட்ட செய்தி
டெ‌‌ஸ்‌ட் தரவ‌ரிசை : சேவாக், முரளி முத‌லிட‌த்த‌ி‌ல்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 09:05.04 மு.ப GMT ]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அ‌‌திரடி ஆ‌ட்ட‌க்கார‌ர் வீரேந்திர சேவாக் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

காலியில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தாலும் அதில் சதம் அடித்ததால் சேவாக் `நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

2வது இடம் வகிக்கும் இலங்கை அண‌ி‌த் தலைவ‌ர் சங்கக்கராவுக்கும் அவருக்கும் 14 புள்ளிகள் இடைவெளி உள்ளன.

2வது இன்னிங்சில் 84 ரன்கள் விளாசிய இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் காலி டெஸ்டில் ஜொலிக்காத மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வீழ்ச்சி கண்டுள்ளனர்.

கவுதம் கம்பீர் 6 இடங்கள் சரிந்து 10வது இடத்திற்கும், வி.வி.எஸ்.லட்சுமண் 2 இடங்கள் குறைந்து 15வது இடத்திற்கும், ராகுல் டிராவிட் ஒரு இடம் குறைந்து 18வது இடத்திற்கும், தோ‌னி 14 இடங்கள் சரிந்து 40வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

காலி போட்டியில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அதன் மூலம் 800 விக்கெட் உலக சாதனையை எட்டிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன், டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 3வது இடத்துடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.

அவருக்கு முன்பாக முதல் 2 இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், பாகிஸ்தானின் முகமது ஆசிப் ஆகியோர் உள்ளனர்.

முரளிதரன், பந்து வீச்சாளர் தரவரிசையில் நம்பர் ஒன் இடம் வகித்ததில் சாதனை படைத்தவர் ஆவார். அவர் 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி இருந்தார்.

அதன் பிறகு மொத்தம் 214 டெஸ்ட் போட்டிகளின் போது நம்பர் ஒன் இடத்தில் இருந்து சாதனை படைத்து இருக்கிறார். அதாவது 1,711 நாட்கள் அவர் முதலிடத்தை ஆக்கிரமித்து இருந்தார்.

முரளிதரனுக்கு அடுத்து அதிகபட்சமாக ஆஸ்‌‌ட்ரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத், 174 டெஸ்ட்களின் போது முதலிடத்தில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ]
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி‌த் தலைவ‌ர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்]
டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] []
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்]
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]