| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை கிடைக்கவில்லை : ஐ.சி.சி |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:48.29 மு.ப GMT ] |
பாகிஸ்தானில் லாகூரில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான உரிய விசாரணை அறிக்கைகள் எதுவும் பாகிஸ்தானினால் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லையென சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு பின்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கட் போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஐ.சி.சி அனுமதிக்கவில்லை.
கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக கடாபி மைதானத்திற்கு சென்றுகொண்டிருந்த இலங்கை கிரிக்கட் வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸை இலக்கு வைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பாதுகாப்பு வீரர்கள், சிவிலியன்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், இலங்கை அணிவீரர்கள் ஏழு பேரும் பயிற்சியாளரும் காயமடைந்தனர்.
அதன் பின்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கட் போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்துவதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் மறுத்திருந்தது.
இதனால் உலகக் கிண்ண (2011) போட்டிகளை கூட்டாக நடத்துவதற்கான வாய்ப்பையும் பாகிஸ்தான் இழந்தது. அத்துடன் பாகிஸ்தான் பங்குகொள்ளும் சர்வதேச தொடர்களும் பொது இடத்தில் நடத்தப்பட்டன.
தாக்குதலின் பின்னர் அது குறித்த பூரணை விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கட் சபையிடம் சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் கோரிக்கை விடுத்திருந்தது. மீண்டும் மீண்டும் பல தடவை வற்புறுத்தியும் இருந்தது.
ஆனால் இதுவரை எந்தவொரு அறிக்கையையும் பாகிஸ்தான் சார்பில் ஐ.சி.சிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
"லாகூர் தாக்கதல் தொடர்பாகவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் குறித்து நாங்கள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கட் சபையிடம் கேட்டிருந்தோம். இதுவரை எங்களுக்கு அவ்வாறான எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாகிஸ்தானில் போட்டிகளை நடத்துவது என்பது சிக்கலான விடயம்"என சர்வதேச கிரிக்கட் சம்மேளனத் தலைவர் ஹரூன் லோர்கட் ரொய்டருக்கு தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|