| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கம் |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 06:47.49 மு.ப GMT ] |
ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அணியின் பயிற்றுவிப்பாளராக தொடர்ந்து நீடிப்பதற்கு மரடோனா விருப்பம் தெரிவித்த போதிலும், ஆர்ஜன்டீன கால்பந்தாட்டப் பேரவை அதற்கு இடமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மரடோனாவின் உதவியாளர்கள் தொடர்பில் ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட நிர்வாகம் எடுத்தத் தீர்மானங்களுக்கு ஒப்புக் கொள்ளாத காரணத்தினால் மரடோனா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தென் ஆபிரிக்காவில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டித் தொடரின் காலிறுதியில் எதிர்பாராத விதமாக ஆர்ஜன்டீன அணி ஜெர்மனியிடம் நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
ஆர்ஜன்டீனாவின் 20 வயதுக்கு உட்பட்ட தேசிய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் செர்ஜியோ பெட்டிஸ்டாவிடம் தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பு தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|