துடுப்பாட்ட செய்தி
முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை வலுவான நிலையில்
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 07:59.23 பி.ப GMT ]
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இலங்கை அணி 312 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி இன்று எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 90 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய டில்ஷான் அதிரடியாக 54 ஓட்டங்களையும் பரண விதான 100 ஓட்டங்களையும் பெற்றனர். இதில் ஆரம்ப இணைப்பாட்டமாக 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது டில்ஷான் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ணிஅணித்தலைவர் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 130 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக பரணவிதான மற்றும் சங்கக்கார 174 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதில் பரணவிதான 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இடைநிலை வீரர் ஜயவர்தன 13 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

எனவே இன்றைய நாள் ஆட்ட முடிவின் போது இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் சர்மா, ஓஜா தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பெற்றனர். எனவே இரண்டாவது இன்னிங்ஸ் நாளை வழமையான நேரத்திற்கு ஆரம்பமாக உள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ]
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி‌த் தலைவ‌ர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்]
டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] []
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்]
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]